பெயர்ச்சொல், வினைச்சொல்

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்

என ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

“பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது.”

தொல்காப்பிய விளக்கம்

நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ் அறுபொருள்

நன்னூல் விளக்கம்

‘இடுகுறி காரண மரபோடு ஆக்கம்
தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று
ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே’

எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

 1. இயற்கைப் பெயர்கள்
 2. ஆக்கப் பெயர்கள்
 3. இடுகுறிப் பெயர்கள்
 4. காரணப் பெயர்கள்
 5. சாதாரண பெயர்கள்
 6. பதிலிடு பெயர்கள்
 7. நுண்பொருட் பெயர்கள்
 8. பருப்பொருட் பெயர்கள்
 9. உயிர்ப் பெயர்கள்
 10. உயிரில் பெயர்கள்
 11. உயர்திணைப் பெயர்கள்
 12. அஃறிணைப் பெயர்கள்
 13. தனிப் பெயர்கள்
 14. கூட்டுப் பெயர்கள்

பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. நான், நீ, அவன், அவள் போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம்.

மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம்.

தன்மை : நான், நாங்கள். முன்னிலை : நீ, நீர், தாங்கள். படர்க்கை : அவன், அவள், அவர்கள், அது, அவை.

தன்மை ஒருமை : நான். தன்மை பன்மை : நாங்கள்.

முன்னிலை ஒருமை : நீ, தம். முன்னிலை பன்மை : நீர், தாங்கள்.

படர்க்கை ஒருமை : அவன், அவள், அது. படர்க்கை பன்மை : அவர்கள், அவை.

வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

எச்சம் இரண்டு வகைப்படும். அவை

ஒரு வினையானது (செயலானது)முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் சான்று: படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் இப் பெயர், வினை எச்சங்கள் 1.தெரிநிலை 2. குறிப்பு என இரண்டாகப் பகுக்கப்படும்

முற்று

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: அவன் பொன்னன்.

எச்சம்

வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

எ.கா: படித்துத் தேறினான்

வெளி இணைப்புகள்

தமிழ் இலக்கணம் – Wikipedia

பெயர்ச்சொல் – Wikipedia

வினைச்சொல் – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *