கேப் வர்டி (Cape Verde, /ˌkeɪp ˈvɜːrd/ (கேட்க) (போர்த்துக்கீசம்: Cabo Verde, கபு வர்டி) ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். தொலெமி போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய புவி நெடுங்கோடு இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் போர்த்துக்கேயரால் 15 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான செனகலின் பசுமை முனையின் போர்த்துக்கேய மொழிப் பெயரான கபு வர்டி எனப் பெயரிடப்பட்டது.
About the author
Related Posts
August 22, 2021
Actor Chester Conklin
August 31, 2021
Actor Frederic De Belleville
September 1, 2021