சாட் (அல்லது தசாத், அரபு:تشاد; பிரெஞ்சு: Tchad), நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு “ஆபிரிக்காவின் இறந்த இதயம்” (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது. இங்கு 200 வெவ்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன. பிரெஞ்சும் அரபு மொழிகளும் ஏற்பு பெற்ற மற்றும் அலுவல் மொழிகளாகும். இஸ்லாம் இதன் முக்கிய மதமாகும்.
About the author
Related Posts
August 4, 2021
Actor Stanley Andrews
May 31, 2021
ஔவையார் | Avvaiyar
September 1, 2021