கொலம்பியா | Colombia

கொலம்பியா அல்லது கொலம்பியக் குடியரசு (República de Colombia) என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரிபியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர், மற்றும் பெருவும், மேற்கில் பனாமாவும் பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. தனது கடல் எல்லைகளை கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஒண்டுராசு, ஜமேக்கா, டொமினிக்கன் குடியரசு, மற்றும் எயிட்டியுடன் பகிர்ந்து கொள்கின்றது. இது ஒற்றையாட்சி, அரசியலமைப்பைச் சார்ந்த குடியரசாகும் ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.


1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். பொகோட்டாவைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. எசுப்பானியாவிடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் “கிரான் கொலம்பியா” கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி புதிய கிரெனடா குடியரசாக உருவானது. புதிய நாடு கிரெனடியக் கூட்டரசு என 1858இலும் கொலம்பிய ஐக்கிய நாடுகள் என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது. கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் பண்பாட்டு மரபுவளமிக்க மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் நிலத்தோற்றமும் வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் அந்தீசு மலைத்தொடரின் மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.


தவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் அமேசான் மழைக்காடு, அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது. இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது. சிவெட்சு (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது. கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.


நகரங்கள்


கொலம்பியா நகரங்களில் சில:


  • கர்த்தெகனா

  • பொகோட்டா

  • மெதெயின்

  • கலி

  • வெளி இணைப்புகள்

    கொலம்பியா – விக்கிப்பீடியா

    Colombia – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *