குக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.
முக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர்.
2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும்.
குக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.