செக் குடியரசு (செக் மொழி: Česká republika) நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் வடக்கில் போலந்து நாடும் மேற்கிலும் வடமேற்கிலும் ஜெர்மனியும் தெற்கில் ஆஸ்திரியாவும் கிழக்கில் ஸ்லோவேக்கியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாடானது 78,866 சதுர கிலோமீட்டர்கள் (30,450 சதுர மைல்கள்) பரப்பளவு உடையது. பிராக் என்னும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்நாடு விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள் தொகை சுமார் 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஆக இருக்கின்றது. மேலும் லிபரக், பெர்னோ, ஒஸ்த்ரவா மற்றும் பில்சன் என்னும் நகரங்கள் உள்ளன. இது ஒரு வளர்ச்சியடைந்த நாடாகத் திகழ்கின்றனது. இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஓர் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.
செக் மொழி அரச ஏற்புப் பெற்ற மொழியாகும்.
வெளி இணைப்புகள்
செக் குடியரசு – விக்கிப்பீடியா