கிழக்குத் திமோர் (East Timor, /ˌiːst ˈtiːmɔːr/ (கேட்க), தேதுனம்: Timór Lorosa’e, போர்த்துக்கீசம்: Timor-Leste), அல்லது திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of Timor-Leste, tiˈmɔr ˈlɛʃteɪ) என்பது தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் கிழக்கு பகுதியில் உள்ள நாடாகும். இது அவுஸ்திரேலியா வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
திமோர் என்பது “திமூர்” என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடைந்தது. போர்த்துகேயரால் திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்ட போது போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. திமோர்-லேசுடே என்ற பெயரே பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் அரசு கோருவதுண்டு.
21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக2002 மே 20 இல் உருவான கிழக்கு திமோர், பிலிப்பீன்சுடன் கத்தோலிக்கப் பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும்.
வெளி இணைப்புகள்
கிழக்குத் திமோர் – விக்கிப்பீடியா