கிர்கிஸ்தான் அல்லது கிர்கிசுதான் (Kyrgyzstan) மத்திய ஆசியாவில் ஒரு நாடாகும். இந்நாட்டின் வடக்கில் கசக்ஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தென்மேற்கில் தஜிகிஸ்தான், மற்றும் கிழக்கில் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
வரலாறு
பண்டைய வரலாறு
அண்மைய வரலாற்று ஆய்வுகளின்படி கிர்கிஸ்தானின் வரலாறு கிமு 201 இல் தொடங்குகிறது. பண்டைய கிர்கிஸ்தானியர்கள் நடு சைபீரியாவின் மேலை யெனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வாழ்ந்தனர். பசிரிக் மற்றும் டாஷ்டிக் பண்பாடுகளின் கண்டுபிடிப்பு கிர்கிஸ்தானியர்கள் துருக்கிய நாடோடி பழங்குடியினரின் கலப்பினம் என்று தெரிவிக்கிறது. 7ம்-12ம் நூற்றாண்டு சீன மற்றும் இஸ்லாமிய எழுத்துக்கள் கிர்கிஸ்தானியர்களை சிகப்பு அல்லது வெளிறிய முடி, வெளிறிய தோல் மற்றும் பச்சை அல்லது நீல நிற கண்களை உடையவர்கள் என்று கூறுகின்றன.
வெளி இணைப்புகள்
கிர்கிசுத்தான் – விக்கிப்பீடியா