சான் மரீனோ | San Marino

சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.


சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.


1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.


1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.


சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.

வெளி இணைப்புகள்

சான் மரீனோ – விக்கிப்பீடியா

San Marino – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *