சீசெல்சு | Seychelles

சீசெல்சு (Seychelles, /seɪˈʃɛlz/ (கேட்க) சே-செல்ஸ்-‘; பிரெஞ்சு: [sɛʃɛl]), அதிகாரபூர்வமாக சீசெல்சு குடியரசு (Republic of Seychelles) என்பது ஒரு தீவுக்கூட்டமும், இந்தியப் பெருங்கடலில் உள்ள 115 தீவுகளைக் கொண்ட ஒரு தீவு நாடும் ஆகும். இதன் தலைநகர் விக்டோரியா. சீசெல்சு கிழக்கு ஆப்பிரிக்க பெரும்பரப்பில் இருந்து 1,500 கிமீ கிழக்கே உள்ளது. இதற்கு தெற்கே கொமொரோசு, மயோட்டே, மடகாசுகர், ரீயூனியன், மொரிசியசு ஆகிய நாடுகள் உள்ளன.


கிட்டத்தட்ட 93,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ள சீசெல்சு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். ஆனாலும், பிரித்தானியக் கடல்-கடந்த மண்டலங்களான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவை விட கூடுதலான மக்கள் இங்கு வசிக்கின்றனர். இது பிரித்தானியாவிடம் இருந்து 1976 சூன் 29 இல் விடுதலை பெற்றது.

வெளி இணைப்புகள்

சீசெல்சு – விக்கிப்பீடியா

Seychelles – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *