ஸ்லோவேனியா (Slovenia) மத்திய ஐரோப்பாவின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் மேற்கே இத்தாலியும் வடக்கே ஆஸ்திரியாவும் வடகிழக்கில் அங்கேரியும் தென்கிழக்கில் குரோஷியாவும் தென்மேற்கில் அத்ரீயடிக் கடலும் அமைந்துள்ளன. இது முன்பு யுகோஸ்லாவியா நாட்டின் பகுதியாக இருந்தது.
ஸ்லோவீனியா ஒரு நாடாளுமன்றக் குடியரசு நாடாகும். இது ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளது. இதன் தலைநகரம் லியுப்லியானா.