சிரியா | Syria

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும், யோர்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.


சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. 1963 இலிருந்து பாசாட் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது. 1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் காணப்படுகிறார்.


வரலாற்றில் சிரியா இன்றைய லெபனான், இசுரேல்,பாலஸ்தீனம் போன்றவற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிலமான அல்-ஜசீரா பகுதியை நவீன சிரியாவின் ஏனையப் பகுதிகளையும் கொண்டதாகக் கருதப்பட்டது. இதன்படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது. 1967 இல் இசுரேலுடன் ஏற்பட்ட போரின் பின்னர் இசுரேல் சர்ச்சைக்குரிய கோகான் மேடுகளை கைப்பற்றி தன் வசமாக்கி கொண்டதன் பின்னர் துருக்கியுடன் அடேய் மாநிலம் தொடர்பான சர்ச்சை இப்போது முக்கியத்துவம் குன்றியுள்ளது.


சிரியா ஐ.நா சபை மற்றும் அணிசேரா நாடுகள் அமைப்பிலும் அங்கத்துவம் வகிக்கின்றது. தற்போதைய சிரியாவின் அரபுலீக் அமைப்பின் அங்கத்துவம் மற்றும் இசுலாமிய கூட்டுறவு அமையத்தின் அங்கத்துவம் என்பன தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2011இல் சிரியாவின் அசாத் மற்றும் அவரது பாத் அரசுக்கு எதிரான போராட்டங்கள், அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலைதுாக்கியது. இது சிரிய உள்நாட்டு யுத்தத்துக்கு வழிகோலியது.உலகில் அமைதியற்ற நாடுகளில் ஒன்றாகச் சிரியா மாறிவருகின்றது.


வரலாறு


பண்டைய அண்மைய கிழக்குப்பகுதி


ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது.அங்கே,உலகின் முதல் கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது.நியோலிதிக் காலப்பகுதியில், முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.


மத்திய காலம்


முகம்மது நபியவர்களுக்கும், சிரியாவின் மக்கள் மற்றும் கோத்திரங்களுக்கும் இடையிலான முதலாவது தொடர்பு ஜுலை, 626இல் துாமதுல் ஜன்தல் படையெடுப்புடன் ஆரம்பித்தது.சிரயாவின் சில கோத்திரத்தினர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டதுடன், மதீனா நகரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்தனர் என்ற செய்தி ஒற்றர்களின் மூலம் கிடைக்கப்பெற்றதும் சிரியாவின் துமா பகுதியின் மீது படையெடுப்பை மேற்கொள்ளுமாறு முகம்மது நபியவர்கள் பணித்தார்கள்.


கி.பி.640இல் அரபு ராசிதுான் இராணுவத்தின் தளபதி காலித் இப்னு வலீத்தினால் சிரியா கைப்பற்றப்பட்டது.கி.பி. 7ஆம் நுாற்றண்டின் மத்திய பகுதியில் உமையா வம்சத்தினால் சிரியா பேரரசு ஆட்சி செய்யப்பட்டது.பேரரசின் தலைநகராக சிரியாவின் டமஸ்கஸ் நகரம் மாற்றப்பட்டது.பின்வந்த உமையா ஆட்சியாளர்களிர் காலத்தில் நாடு வீழ்ச்சியடைந்தது.முக்கியமாக தாத்தாரியர்களின் தாக்குதல்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்ததுடன்,ஊழல் அதிகரித்ததுடன் நாட்டில் பல இடங்களில் புரட்சிகள் வெடித்தன.750இல் உமைய வம்சத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், அப்பாசிய வம்சத்தினர் ஆட்சியை பொறுப்பெடுத்ததுடன் தலைநகர் பக்தாத்துக்கு மாற்றப்பட்டது.


உள்நாட்டு போர்


2011ஆம் ஆண்டு இந்நாட்டின் அதிபர் ஆசாதுக்கு எதிராக நடந்துவரும் உள்நாடு போர் இன்றுவரை நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டின் தலைநகர் தவிர்த்து மற்ற இடங்களில் இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் 97 சதவீதம் அழிந்து போய்விட்டன. தற்கால நெருக்கடி

வெளி இணைப்புகள்

சிரியா – விக்கிப்பீடியா

Syria – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *