பெலீசு (IPA: [bəˈliːz]), முன்னர் அறியப்பட்ட பெயர்: பிரிட்டிஷ் ஹாண்டுராஸ்), நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும். பெலீசு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும். 1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் என அறியப்பட்டது. இந்நாடு 1981ல் விடுதலை பெற்று காமன்வெல்த் கூட்டுநாடுகளுக்குள் ஒன்றாகவுள்ளது. பெலீசு கரீபிய குமுகாயம் (CARICOM) என்னும் குழுவையும் நடு அமெரிக்கக் கூட்டு (Sistema de Integración Centroamericana (SICA)) என்னும் இயக்கத்தையும் சேர்ந்த நாடு. இந்நாடு தம் மக்களில் பழக்க வழக்கங்களாலும் பண்பாட்டாலும் தன்னை கரீபிய இன நாடு மற்றும் நடு அமெரிக்க நாடு என்று கருதுகின்றது. 22, 960 சதுர கி.மீ (8,867 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 294,385 மக்களே வாழ்கின்றனர் (பெலீசிய 2007 ஆம் ஆண்டு இடைக்கால கனக்குப்படி). மக்கள் அடர்த்தி, நடு அமெரிக்காவிலேயே மிகக்குறைவானது. ஆனால் இந்நாட்டின் மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் 3.5% ஆகும் (2006 தோராய மதிப்பீட்டின் படி).
About the author
Related Posts
March 16, 2021
நடிகர் நெப்போலியன் | Actor Napoleon
March 27, 2021