பெனின் அல்லது உத்தியோகப் பட்சமாக பெனின் குடியரசு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது 1975 ஆம் ஆண்டுக்கு முன்னர் டாகோமே என அழைக்கப்பட்டது. பெனினின் மேற்கில் டோகோவும் நைஜீரியா கிழக்கிலும் புர்கினா ஃபாசோ மற்றும் நைஜீரியா என்பன வடக்கிலும் அமைந்துள்ளன. தெற்கில் பெனின் குடாவில் சிறிய கடல் எல்லையையும் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் போர்டோ நோவோ, அரசாட்சி மையம் கொடோனௌ ஆகும். ஒடுங்கிய கரையோரப்பகுதிகளைக் கொண்ட இந்நாட்டின், வடபகுதியில் அடர்ந்த காடுகளும் மேட்டு நிலங்களும் உயர் மலைகளும் காணப்படுகின்றன. தெற்கே சதுப்பு நிலங்களும் காணப்படுகின்றன. “லா டெரி டி பேரே”மேட்டு நிலம், “அட்டகோரா” மலைகள் என்பன முக்கிய நிலவுருக்களாகும். நைகர் மற்றும் கியூமே என்பன இங்குள்ள முக்கிய ஆறுகளாகும்.
வரலாறு
16 ஆம் நூற்றாண்டில் பெற்றிருந்த டஹோமி எனும் மேற்காபிரிக்க அரசின் இருப்பிடம் இதுவே. 1872 இல் பிரான்ஸ் இந்நாட்டை ஆக்கிரமித்து தனது காலனியாக்கியது.1960 ஆவணி மாதம் முதலாம் திகதி பெனின் குடியரசாக திகழ்ந்தது. இதனையடுத்து இராணுவ அரசுகளின் ஆதிக்கம் நிலவியதொடு, 1972 இல் மத்தேயு கேரேகௌ எழிச்சியுடன் அது முடிவுக்கு வந்தது. 2006 தேர்தலில் யாயி போனி அதிபராகத் தேர்ந்த்தேடுக்கப்பட்டார்.
கலாச்சாரம்
பல்வேறு வகையான உணவுகளை உட்கொள்வர். கோழி இறைச்சி, மீன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி என்பன அவற்றுள் அடங்கும். இவை தவிர: அரிசி, வற்றாளை, மரவள்ளி, உருளைக்கிழங்கு என்பவற்றையும் விரும்பி உண்பர். பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதைபந்தாட்டமும் டென்னிஸ் விளையாட்டும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. பெனின் மக்கள் தொகையில் 50% மானோர் ஆபிரிக்காவின் உள்ளநாட்டு மதமாகிய “வூடு” சமயத்தவர்களே. “வூடு” என்றால் “மர்மம் நிறைந்த” என்று பொருள். தலைமுறை தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கைகளும் ஆசார, அனுஸ்டாரங்களும் ஒன்றிணைந்த ஒரு வழிபாட்டு வடிபமே வூடு.