போட்ஸ்வானாக் குடியரசு என்று முறைப்படி அழைக்கப்படும் போட்ஸ்வானா நாடு (வார்ப்புரு:Lang-tn), முற்றிலும் பிறநாடுகளால் சூழப்பட்ட தென் ஆப்பிரிக்க நாடு ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை பாட்ஸ்வானர் என்று அழைப்பர் (தனியொருவரை மோட்ஸ்வானா அல்லது மோட்ஸ்வானர் என்பர்). முன்னர் இந்த நாடு பிரித்தானியப் பாதுகாப்பில் இருந்த பகுதியாகிய பெச்சுவானாலாந்து என்பதாகும். செப்டம்பர் 30, 1966ல் விடுதலை பெற்றபின் போட்ஸ்வானா என்னும் பெயர் பெற்றது. போட்ஸ்வானா இன்று பிரித்தானிய பொதுநலவாய நாடுகள் அணியில் உள்ள ஒரு நாடு. இதன் தெற்கிலும், தென்கிழக்கிலும் தென் ஆப்பிரிக்காவும் மேற்கே நமிபியாவும், வடக்கே சாம்பியாவும், வடகிழக்கே சிம்பாப்வேயும் உள்ளது. இந்நாட்டின் பொருளியல் தென் ஆப்பிரிக்கவுடன் நெருங்கிய தொடர்பும் தாக்கமும் கொண்டது. போட்ஸ்வானாவின் பொருளியலில் கனிமங்களைத் எடுத்தலும் (38%), தொழிலின சேவைகளும் (44 %), கட்டுமானங்களும் (7 %), தொழில் உற்பத்தியும் (4 %) மற்றும் வேளான்மையும் (2 %) பங்கு வகிக்கின்றன.
About the author
Related Posts
April 16, 2021
நடிகை நசீம் பானு | Actress Naseem Banu
March 27, 2021