புர்க்கினா பாசோ (Burkina Faso) என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே கோட் டிவார் ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாடு முன்னர் அப்பர் வோல்ட்டா (Upper Volta) என்ற பெயரில் இருந்தது, பின்னர் ஆகஸ்ட் 4, 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள். 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் Côte d’Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
வெளி இணைப்புகள்
புர்க்கினா பாசோ – விக்கிப்பீடியா