காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo, பிரெஞ்சு: République démocratique du Congo) ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். 1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கிமீ கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகாண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது. இது பரப்பளவில் ஆபிரிக்காவில் இரண்டாவது பெரிய நாடு மற்றும் உலகின் பதினோராவது பெரிய நாடாகும். இந்நாடு 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்டதாக உள்ளது, மேலும் காங்கோ ஜனநாயகக் குடியரசானது அதிகாரபூர்வமாக பிரெஞ்சு மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளில் மிகுதாயான மக்கள் தொகைகொண்ட நாடாகவும், ஆபிரிக்காவில் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகிலேயே பதினெட்டாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது.
80,000 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கோ பிரதேசத்தில் முதலில் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது. 7 ஆம் நூற்றாண்டில் பாண்டு மக்களின் குடியேற்றம் துவங்கியது. கொங்கோ இராச்சியமானது 14 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தது. 1879 ஆம் ஆண்டில், பெல்ஜிய குடியேற்றமானது 1885 ஆம் ஆண்டில் காங்கோ சுதந்திர அரசு ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுத்தது. 1908 ஆம் ஆண்டில், பெல்ஜியம் இப்பகுதியை பெல்ஜியன் காங்கோ என்ற பெயருடன் தன் நாட்டுடன் இணைத்ததுக்கொண்டது. காங்கோவில் ஏற்பட்ட நெருக்கடியால், காங்கோவுக்கு பெல்ஜியம் 1960 இல் விடுதலை வழங்கியது. 1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும். 1990 களின் முற்பகுதியில், மொபூட்டுவின் ஆட்சி பலவீனப்படத் தொடங்கியது. 1996-ல் துவங்கிய காங்கோவின் உள்நாட்டுப் போர்கள், மொபூட்டுவின் 32-ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை அழித்தது. இந்த உள்நாட்டுப் போர்களின் இறுதியில் ஒன்பது ஆபிரிக்க நாடுகள் மற்றும் பல குழுக்களைக் கொண்ட ஐ.நா. அமைதி காக்கும்படை ஆகியவை இந்த போரில் தலையிட்டன, உள்நாட்டுப் போரில் இருபது ஆயுத குழுக்கள் ஈடுபட்டன, வார்ப்புரு:Reliable இந்தப் போர்களினால் 5.4 மில்லியன் மக்கள் இறந்தனர்.
காங்கோ ஜனநாயக குடியரசானது இயற்கை வளங்களுக்கு குறையில்லாத வளமான நாடு, ஆனால் அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மை, உள்கட்டமைப்பில் குறைபாடுகள், ஆழ்ந்த வேரூன்றிய ஊழல், காலனித்துவத்தால் பல நூற்றாண்டுகளாக சுரண்டப்பட்டதால், சிறிய அளவிலேயே வளர்ச்சி கண்டுள்ளது. தலைநகர் கின்ஷாசா தவிர, மற்ற முக்கிய நகரங்கள், லுபும்பாஷி மற்றும் முபுஜி-மையி ஆகியவை ஆகும். காங்கோவின் மிகப்பெரிய ஏற்றுமதி பொருள் கச்சா கனிம்ப் பொருட்களாகும், காங்கோவின் ஏற்றுமதியில் சீனாவுக்கு 50% க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மனித அபிவிருத்தி சுட்டெணில் (HDI), காங்கோ மனித வளர்ச்சியின் குறைந்த அளவிலேயே உள்ளது, 187 நாடுகளில் 176 வது இடத்தைப் பெற்றுள்ளது.
பெயர் வரலாறு
கொங்கோ ஜனநாயகக் குடியரசு, காங்கோ சுதந்திர நாடு, பெல்ஜிய காங்கோ, கொங்கோ குடியரசு (லியோபோல்ட்வில்), கொங்கோ ஜனநாயக குடியரசு, மிக அண்மையில் இந்தாட்டின் தற்போதைய பெயர் ஜெயர் குடியரசு என்ற பெயரில் இருந்து தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
1965 முதல் அக்டோபர் 1971 வரையான காலப்பகுதியில், இந்த நாடு அதிகாரப்பூர்வமாக “காங்கோ ஜனநாயகக் குடியரசு” என்று அழைக்கப்பட்டது, பின்னர் ஜெயர் குடியரசு என மாற்றப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், சோவியரிங்கன் தேசிய மாநாட்டு நாட்டின் பெயரை “காங்கோ ஜனநாயக குடியரசு” என மாற்ற வாக்களித்தது, ஆனால் மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. 1997 ஆம் ஆண்டு நீண்டகாலமாக ஆண்ட சர்வாதிகாரி மொபூடு சீஸ் செகோவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த லாரென்ட்-டீசிரே கபிலா நாட்டின் பெயரை மீட்டெடுத்தார்.
புவியியல்
கொங்கோவின் பரப்பளவு 2,345,408 சதுர கிலோமீற்றர் (905,567 சதுர மைல்) ஆகும். இங்குள்ள கொங்கோ காடுகள், அமேசன் மழைக்காட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக உள்ள மிகப்பெரிய மழைக்காடாகும்.
மாகாணங்கள்
காங்கோ மக்களாட்சிக் குடியரசானது 10 மாகாணங்களாகவும் 1 நகர மாகாணமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணங்கள் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.