சீபூத்தீ (ஜிபூட்டி, ஜீபூத்தீ, Djibouti) அல்லது அதிகாரபூர்வமாக சீபூத்தீக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். சீபூத்தீயின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும் செங்கடலாலும் ஆக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அராபிய தீபகற்பத்தில் யெமன் அமைந்துள்ளது.