மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் (Federated States of Micronesia) என்பது பசிபிக் பெருங்கடலில் பப்புவா நியூகினிக்குத் வடகிழக்கே அமைந்திருக்கும் ஒரு தீவு நாடாகும். இங்கு மொத்தம் 607 தீவுகள் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் சுயாதீன அநுசரணையுடனான தன்னாட்சி அதிகாரமுடைய ஒரு நாடாகும். முன்னர் இந்நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் நேரடி ஆட்சியின் கீழ் ஐநாவின் கண்காணிப்பில் இருந்தன. 1979இல் இவை தமது அரசியலமைப்புச் சட்டத்தை வரைந்து பின்னர் 1986இல் விடுதலை பெற்றன. தற்போது இந்நாடு மிகப்பெருமளவில் வேலையில்லாப் பிரச்சினை, அளவுக்கதிகமான மீன்பிடித்தல், அமெரிக்காவின் அதிக நிதி உதவி போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றது.
மைக்ரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்ரோனீசியா என்ற பகுதியில் அமைந்திருக்கின்றன. மைக்ரோனீசியா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான தீவுகள் மொத்தம் ஏழு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மைக்ரோனீசியா என்பது ஒரு நாடல்ல, ஆனால் இப்பிரில் உள்ள கூட்டு நாடுகள் பலவும் தனித்தனியே சுயாதீன அரசைக் கொண்டுள்ளன.
நிர்வாக அலகுகள்
இக்கூட்டமைப்பில் நான்கு மாநிலங்கள் உள்ளன:
மாநிலம் | தலைநகர் | பரப்பளவு | மக்கள் தொகை |
---|---|---|---|
சூக் | வெனோ | 127 கிமீ² | 53,595 |
கோஸ்ரே | டோஃபொல் | 110 கிமீ² | 7,686 |
போன்பேய் | கொலோனியா | 346 கிமீ² | 34,486 |
யாப் | கொலோனியா | 118 கிமீ² | 11,241 |
வெளி இணைப்புகள்
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் – விக்கிப்பீடியா
Federated States of Micronesia – Wikipedia