லாத்வியா (lætviːə; லாத்விய மொழி: Latvija, லிவோனிய மொழி: Lețmō) அல்லது லாத்வியக் குடியரசு (லாத்விய மொழி: Latvijas Republika, லிவோனிய மொழி: Lețmō Vabāmō), என்பது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004 இலிருந்து அங்கம் வகிக்கின்றது.