லெசோத்தோ (அல்லது லெசூட்டு, Lesotho, lɪˈsuːtu), என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும். பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள் படும். இந்நாட்டின் மக்கட்தொகை 2,031,348. இந்நாட்டின் மக்கட்தொகையில் தோராயமாக 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.