லீக்கின்ஸ்டைன் (Liechtenstein, /ˈlɪktənstaɪn/ (கேட்க); LIK-tin-styn; இடாய்ச்சு: [ˈlɪçtn̩ʃtaɪn]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும். இது லீக்கின்ஸ்டைன் இளவரசரின் தலைமையில் ஆளப்படும் ஒரு அரசியல்சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாடு மேற்கு, மற்றும் தெற்கே சுவிட்சர்லாந்து, கிழக்கு மற்றும் வடக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் (62 சதுர மைல்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை 37,000. 11 மாநகரசபைகளைக் கொண்ட இந்நாட்டின் தலைநகர் வாதூசு ஆகும்.
பொருளாதாரரீதியில், கொள்வனவு ஆற்றல் சமநிலை]யின் படி லீக்கின்ஸ்டைன் ஆள்வீத வருமான அடிப்படையில் உலகில் கத்தார் மற்றும் லக்சம்பர்க்கிற்கு அடுத்த படியாக மூன்றாவது நிலையில் உள்ளது. வேலையின்மை அடிப்படையில் இது உலகின் 1.5% என்ற வீதத்தில் உலகின் மிகக்குறைந்த நிலையில் உளது.
ஆல்ப்சு காலநிலை கொண்ட லீக்கின்ஸ்டைன், குறிப்பாக மலைப்பாங்கான நாடாகும். குளிர்கால விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சிறிய பண்ணைகள் காணப்படுகின்றன. நாட்டின் பலமான நிதிச் சேவைகள் வாதூசு நகரில் அமைந்துள்ளன. லீக்கின்ஸ்டைன் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய தடையற்ற வணிகக் கூட்டமைப்பில் உள்ளது.
வெளி இணைப்புகள்
லீக்கின்ஸ்டைன் – விக்கிப்பீடியா