மடகாஸ்கர் | Madagascar

மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.இது மலாய்,இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

வரலாறு

மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றாண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.

வெளி இணைப்புகள்

மடகாசுகர் – விக்கிப்பீடியா

Madagascar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.