மௌரிடானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.