நியுவே (Niue) என்பது தென் பசிபிக் பெருங்கடலில் பொலினீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடாகும். இது பொதுவாக பொலினீசியாவின் பாறை என அழைக்கப்படுகிறது. சுயாட்சி உள்ள நாடாயினும் நியுவே நியூசிலாந்துடன் தன்னிச்சையாக இணைந்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு உரிமையுள்ள முடிக்குரியவரே நியுவேயின் அரசுத்தலைவரும் ஆவார். பெரும்பான்மையான வெளிநாட்டு தொடர்பாடல்கள் நியுவே சார்பாக நியூசிலாந்து மேற்கொண்டு வருகிறது.
நியுவே நியூசிலாந்திலிருந்து வடகிழக்குத் திசையாக 2,400 கிமீ தொலைவில் டொங்கா, சமோவா, குக் தீவுகள் என்பவற்றால் அமைக்கப்படும் முக்கோணத்துள் அமைந்துள்ளது. நியுவே மொழியும் ஆங்கிலமும் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுவதோடு அன்றாட வணிக நடவடிக்கைளிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பான்மையினர் பொலினீசியராவார்கள். இந்நாட்டின் தலைநகர் அலோபி