பலாவு (பெலாவு, Palau, (IPA: [pɑˈlaʊ], [pəˈlaʊ]), பலாவுக் குடியரசு, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது பிலிப்பீன்சிலிருந்து 800 கிமீ கிழக்கேயும், டோக்கியோவிற்கு 3200 கிமீ தெற்கேயும் அமைந்துள்ளது. இது உலகின் வயதில் குறைந்த நாடுகளில் ஒன்றாகவும், மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.இந்நாட்டின் மொத்தப் பரப்பளவு 459 சதுர கிலோ மீட்டர்கள் மட்டும்தான்.
உணவுகள்
இந்தத் தீவில் தென்னை மரங்களைக் கொண்ட சோலைகள், எழிலைக் கிழங்கு எனும் மரவள்ளிக் கிழங்குச் செடிகள் அதிகமாக இருக்கின்றன. இந்தத் தீவு மக்களின் உணவாக எழிலைக் கிழங்குகள், தேங்காய், கீரைச் செடிகள் மற்றும் கடலுணவுகள்தான் அதிகப் பயன்பாட்டில் இருக்கின்றன.
நீருக்கடியிலான உலக அதிசயம்
1989 ஆம் ஆண்டில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் மூழ்காளர்களுக்கான பன்னாட்டுப் பெருங்கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட “நீருக்கடியிலான உலக அதிசயம்” பட்டியலில் பலாவு நாடும் ஒன்றாக இருக்கிறது.