டோங்கா | Tonga

தொங்கா (Tonga, தொங்கா மொழி: Puleʻanga Fakatuʻi ʻo Tonga), அதிகாரபூர்வமாக தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) என்பது பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடாகும். இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் தீவுக்கூட்டம் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர். 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.


தொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே பிஜி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே சமோவாவினாலும், கிழக்கே நியுவேயினாவும், வடமேற்கே கெர்மாடெக் தீவுகளினாலும் (நியூசிலாந்தின் பகுதி), மேற்கே நியூ கலிடோனியா (பிரான்சு), வனுவாட்டு ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது.


1773 இல் ஜேம்ஸ் குக் இங்கு வருகை தந்த போது அவர் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதனால், இத்தீவு நட்புத் தீவுகள் என அழைக்கப்பட்டது. அவர் வந்திறங்கிய போது அங்கு இனாசி என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது.


தொங்கா தனது இறைமையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில், அரசியல் சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை முதலாவது சார்பாண்மை மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இதன்மூலம் முழுமையான அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது.


வெளி இணைப்புகள்

டோங்கா – விக்கிப்பீடியா

Tonga – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *