துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் “சபர்முராட் நியாசொவ்” தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.
வெளி இணைப்புகள்
துருக்மெனிஸ்தான் – விக்கிப்பீடியா