ஏமன் | Yemen

யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சனா ஆகும்.

மக்கள் தொகையியல்

5,27,968 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட யேமனில் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 109 நபர்கள் வாழ்கின்றனர். 2004-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி யேமன் நாட்டின் மக்கள் தொகை 19,685,161 ஆகும். சியா மற்றும் சன்னி பிரிவு இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர்.

பொருளாதாரம்

நாட்டில் பாறை எண்ணெய் உற்பத்தி அருகி விட்ட காரணத்தினால் அரேபிய நாடுகளில் யேமன் வறுமை மிக்க நாடாக உள்ளது.

உள்நாட்டுப் போர்

ஏமனில் சியா மற்றும் சன்னி முஸ்லீம்களிடையே நடைபெறும் உள்நாட்டுப் போரில் இதுவரை 60,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியா பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு இரானும், சன்னிப் பிரிவு இசுலாமியப் போராளிகளுக்கு சவுதி அரேபியாவும் ஆதரவு அளித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போர் காரணமாக யேமனின் தலைநகர் சனாவிலிருந்து ஏடன் துறைமுக நகரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

யெமன் – விக்கிப்பீடியா

Yemen – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *