சாம்பியா (Zambia) அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இது முன்னர் வடக்கு ரொடீசியா என அழைக்கப்பட்டது. சாம்பெசி ஆற்றைக் கருத்திற் கொண்டு இதன் பெயர் சாம்பியா என மாற்றம் பெற்றது.