மரபுச்சொற்கள்

மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது” எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும். இவ்வாறு வரும் சில மரபுகள் கீழே உள்ளன.

ஒலி மரபு

உயிரினங்களின் (பறவை, விலங்கு, பூச்சி) ஒலிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

உயிரினம்ஒலி(மரபு)
ஆடுகத்தும்
எருதுஎக்காளமிடும்
குதிரைகனைக்கும்
குரங்குஅலப்பும்
சிங்கம்முழங்கும்
நரிஊளையிடும்
புலிஉறுமும்
பூனைசீறும்
யானைபிளிறும்
எலிகீச்சிடும்
ஆந்தைஅலறும்
காகம்கரையும்
கிளிபேசும்
குயில்கூவும்
கூகைகுழறும்
கோழிகொக்கரிக்கும்
சேவல்கூவும்
புறாகுனுகும்
மயில்அகவும்
வண்டுமுரலும்
பசுகதறும்

வினை மரபு

வினை மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

பொருள்வினை(மரபு)
அம்புஎய்தார்
ஆடைநெய்தார்
உமிகருக்கினான்
பூபறித்தாள்
மரம்வெட்டினான்
மாத்திரைவிழுங்கினான்
சோறுஉண்டான்
தண்ணீர்குடித்தான்
பால்பருகினான்
கூடைமுடைந்தார்
சுவர்எழுப்பினான்
முறுக்குத்தின்றான்

இருப்பிடம் (மரபு)

உயினங்களின் வாழ்விடம் மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

கறையான்புற்று
ஆட்டுப்பட்டி
மாட்டுத்தொழுவம்
குதிரைக்கொட்டில்
கோழிப்பண்ணை
குருவிக்கூடு
சிலந்திவலை
எலிவளை
நண்டுவளை

தாவர உறுப்பு (மரபு)

தாவரங்களின் உறுப்பு மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

வேப்பந்தழை
ஆவரங்குழை
நெல்தாள்
வாழைத்தண்டு
கீரைத்தண்டு
தாழைமடல்
முருங்கைக்கீரை
தென்னங்கீற்று
கம்பந்தட்டு(திட்டை)
சோளத்தட்டு(திட்டை)

இளமைப் பெயர்கள் (மரபு)

விலங்குகளின் இளமை மரபுச்சொற்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன

கோழிக்குஞ்சு
கிளிக்குஞ்சு
அணிற்பிள்ளை
கீரிப்பிள்ளை
பசுவின் கன்று
நாய்க்குட்டி
புலிப்பறழ்
சிங்கக்குருளை
யானைக்கன்று
குதிரைகன்று
எருமைகன்று

வெளி இணைப்புகள்

மரபுச்சொற்கள் – தமிழ் விக்கிப்பீடியா

About the author

Leave a Reply

Your email address will not be published.