பழமொழி நானூறு

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.

இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினை பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.[சான்று தேவை]

உள்ளடக்கம்

இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புகளும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரப்பட்டுள்ளன.

 1. கல்வி (10)
 2. கல்லாதார் (6)
 3. அவையறிதல் (9)
 4. அறிவுடைமை (8)
 5. ஒழுக்கம் (9)
 6. இன்னா செய்யாமை (8)
 7. வெகுளாமை (9)
 8. பெரியாரைப் பிழையாமை (5)
 9. புகழ்தலின் கூறுபாடு (4)
 10. சான்றோர் இயல்பு (12)
 11. சான்றோர் செய்கை (9)
 12. கீழ்மக்கள் இயல்பு (7)
 13. கீழ்மக்கள் செய்கை (17)
 14. நட்பின் இயல்பு (10)
 15. நட்பில் விலக்கு (8)
 16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் (7)
 17. முயற்சி (13)
 18. கருமம் முடித்தல் (15)
 19. மறை பிறர் அறியாமை (6)
 20. தெரிந்து செய்தல் (13)
 21. பொருள் (9)
 22. பொருளைப் போற்றுதல் (8)
 23. நன்றியில் செல்வம் (14)
 24. ஊழ் (14)
 25. அரசியல்பு (17)
 26. அமைச்சர் (8)
 27. மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
 28. பகைத்திறம் (26)
 29. படைவீரர் (16)
 30. இல்வாழ்க்கை (21)
 31. உறவினர் (9)
 32. அறம் செய்தல் (15)
 33. ஈகை (15)
 34. வீட்டு நெறி (13)

பழமொழி நானூறில் காணப்படும் வரலாற்றுக்குறிப்புகள்

பின்வரும் வரலாற்று நிகழ்ச்சிகள் பழமொழி நானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது:

 • தூங்கும் எயிலும் தொலைத்தலால் (பா.156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைக் குறித்தது)
 • கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (பா.243) (மனு நீதி கண்ட சோழன்)
 • தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பா.77) (பொற்கைப் பாண்டியன்)
 • முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பா.75) (குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)
 • பாரி மடமகள் பாண்மகற்கு….. நல்கினாள்(பா.382) (பாரியின் மகள்)
 • நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பா.7) (கரிகால் சோழன்)
 • சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
 • அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).

பழமொழி நானூறில் வரும் புராணக் குறிப்புகள்

பின்வரும் புராணக் குறிப்புகள் பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ளன:

 • பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து (பா.258) – இராமாயணம்
 • அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பா235) – பாரதம்
 • பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (பா.357) – பாரதம்
 • ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் [பா.184] – மாவலி
 • உலகந்தாவிய அண்ணலே (பா.178) – உலகம் அளந்த வாமானன்

வெளி இணைப்புகள்

தமிழ் இலக்கியம்

பழமொழி நானூறு – தமிழ் விக்கிப்பீடியா

Paḻamoḻi Nāṉūṟu – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.