தென்னை மரம்

இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

வளர் இயல்பு

மணற்பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல மழையும் சூரியஒளியும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.

தென்னை வளர்ப்பு

தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியா, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன.

இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்

 • தேங்காப்பால் – சமையலுக்கு
 • தேங்காய்ப் பால்மா
 • தேங்காப்பூ – சம்பல்
 • உலர் தேங்காப்பூ – இனிப்புப் பண்டங்கள்
 • கொப்பரை
 • நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது
 • பொட்டுச் சட்டியாகப் பயன்படுத்தப்படுவது
 • இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது
 • தென்னோலை
 • கிடுகு
 • ஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்வார்கள்
 • மரம்
 • விறகு
 • பொச்சுமட்டை
 • பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
 • பாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது
 • தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.
 • விசிறி
 • குருத்து – தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, மரபு மருத்துவம்
 • குரும்பட்டி – தேர் போன்ற தானே செய்தல் விளையாட்டுப் பொருட்கள்

வெளி இணைப்புகள்

இளநீர்

தென்னை – தமிழ் விக்கிப்பீடியா

Coconut – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.