அரிய மரம்
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : வெர்னோனியா சேர்வராயன்சிஸ் Veronia shevafoyensis
குடும்பம் : ஆஸ்ட்ரேசியீ (Asteraceae )
மரத்தின் அமைப்பு
இம்மரம் மிக மிக அரிதாக காணப்படுகிறது. இது சூரியகாந்தி செடிக் குடும்பத்தை சார்ந்தது. இக்குடும்பத்தில் 20,000 மேற்பட்ட சாதி செடிகள் உள்ளன. ஆனால் இவற்றில் மரங்களே வளர்வது கிடையாது. இரண்டு மட்டும் மரமாக வளரும். மற்றவை சிறு செடிகளும், கொடிகளாகவும் வளரும்.
இம்மரம் சேர்வராயன் மலையில் மட்டுமே வளர்வதால் இதற்கு இம்மலையின் பெயரே வைக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மரம் உலகின் வேறு எங்கும் கிடையாது. உலகில் இம்மரம் ஒன்று மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து மரமும் அழிந்துவிட்டது. இதற்கு காரணம் இதன் விதைகளில் உட்கரு கிடையாது. வெற்றிடம் மட்டுமே உள்ளது. ஆகையால் விதை முளைப்பது கிடையாது.
மலர்
இம்மரம் 20 அடி உயரம் மட்டுமே வளரும். இதில் வரும் பூக்கள் மிகச்சிறியதாக வெளிர் ஊதா நிறத்தில் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்
இம்மரத்தின் தாயகம் இந்தியா ஆகும். இது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ளது.
வெளி இணைப்புகள்
அரிய மரம் – விக்கிப்பீடியா