உருளைக் கிழங்கு மரம்
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : சோலானம் மேக்ர(Solanum macrantham)
குடும்பம் : ‘சோலனேசியீ(Solanaaceae)
இதரப் பெயர் : உருளைக்கிழங்கு மரம்
மரத்தின் அமைவு
இக்குடும்பத்தில் மரமாக வளரக் கூடியது. இது ஒன்றே. இது 33 அடிக்கும் (10மீ) மேல் வளரக்கூடியது. விரிந்து பரந்து வளரும். இதனுடைய இலைகள் பெரியதாகவும் பலப்பிரிவுகளாக பிரிந்த பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கும். இம்மரத்தில் உள்ள பூக்கள் உருளைக்கிழங்கு செடிகளில் உள்ள பூக்கள்போலவே இருக்கும் மேலும் இதனுடைய பூக்கள் 7 முதல் 12 கொத்தாக இருக்கும். பூ வெடிக்கும்போது வெள்ளையாக இருக்கும். பிறகு இது ஊதா சிவப்பு நிறமாக மாறிவிடும்.
இவை வேகமாக வளரக்கூடியவை. இவற்றின் விதைகள் தட்டையாக அழுந்தித் தகடு (அ) பொட்டு போல இருக்கும். விதைகள் மூலம் பயிரிடப்படுகிறது. இவற்றை அழகு மரமாக வளர்க்கிறார்கள். இக்குடும்பத்தில் 72 சாதிகளும் 1750 இனங்களும் உள்ளன. இவற்றில் இது ஒன்றே மரமாக வளரக்கூடியது.
காணப்படும் பகுதிகள்
இம்மரம் பிரேசில் நாட்டில் காணப்படுகிறது.