இந்திய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ச்காலரிசு என்பதாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெரிதும் காணப்படுகிறது. இதற்கு ஏகாளி மரம், ஏழிலைக் கள்ளி மற்றும் ஏழிலம்பாலை என்னும் வேறுப்பெயர்களும் உள. இது பசுமைமாறாக் காடுகளில் காணப்படுகின்ற மரமாகும். இது அபோசயனேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரமாகும். இம்மரம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பயன்படும் கரும்பலகைகளைச் செய்யப் பயன்படுகிறது. இம்மரம் பள்ளிச் சம்பந்தப்பட்ட அலுவல்களை மேற்கொள்ள உதவுவதால் இதற்கு ச்காலரிசு (Scholaris) என்னும் பெயர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தனிச்சிறப்பு வாய்ந்த மரமாகும். இதற்குப் பேய்மரம் என்றும் பெயருண்டு. இம்மரத்தில் பேய் உலாவுவதாக மலைவாழ் மக்களிடம் நம்பப்படுகிறது .
குறிப்பு
பயன்கள்
வெளி இணைப்புகள்
ஏழிலைப்பாலை மரம் – விக்கிப்பீடியா