உயரமான மரம்
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : சிடோட்சுகா மென்சிசீ Pseudotsuga menziesil
குடும்பம் : பைனேசியீ
இதரப் பெயர் : டோக்லாஸ் பிர் (Douglas Fir)
மரத்தின் அமைவு
மிகவும் உயரமாக வளரும் மரங்களில் இதுவும் ஒன்று. இது 330 அடி (100 மீ) உயரம் வளரக்கூடியது. மிகவும் பசுமையாக இருக்கும.; இம்மரம் உருளையாக இருக்கும். மரத்தின் பட்டை முதலில் சாம்பல் நிறத்திலும், பிறகு சிகப்பு நிறமாக மாறும். இம்மரம் மிகவும் வேகமாக வளரும் மரம். மிகவும் கடினமானதும், உறுதியானதும் ஆகும். கூம்புகள் தொங்கிக் கொண்டு இருக்கும். செதிலுக்கு இடையில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் உள்ளன. ஆண் பூக்கள் ஊதா நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திலும், பெண் பூ ஊதா சிவப்பிலிருந்து பச்சையாகவும் இருக்கும்.
காணப்படும் பகுதிகள்
இம்மரம் வட அமெரிக்காவில் கனடா முதல் மெக்சிகோ வரை காணப்படுகிறது.