ஐப்பரியான் என்பது ஒரு செம்மரம். இது வடக்கு கலிபோர்னியாவில் உள்ளது. இதன் உயரம் 379.3 மீட்டர்கள். இன்று உயிருள்ள மரங்களில் இதுவே உலகின் உயரமான மரம். இது 2006 ஆகத்து 25-ஆம் நாள் கண்டறியப்பட்டது. இது இருக்கும் துல்லியமான இடம் தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில் தெரிவிக்கப்பட்டால் வரும் அதிகமான பார்வையாளர்களால் காட்டின் சூழியல் பாதிக்கப்படும் என்று கருதுகின்றனர். இதில் 502 கனமீட்டர் மரம் இருக்குமெனவும் 700-800 ஆண்டுகள் வயதுடையதாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மரத்தின் மேற்பகுதியில் மரங்கொத்திகளால் ஏற்பட்ட சேதத்தினால் இம்மரம் மேலும் உயரமாக வளராமல் போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெளி இணைப்புகள்
ஐப்பரியான் மரம் – விக்கிப்பீடியா