இடலை (Olea) என்பது இடலைவகையி குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இதில் மொத்தம் சுமார் 40 இனங்கள் உள்ளன. இவை மத்திய கிழக்கு, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் ஐரோப்பிய இடலை என்ற இனம் குறிப்பிடத்தக்க இனம் ஆகும்.