ஈச்ச மரம்

ஈச்ச மரம் அல்லது ஈச்சை மரம் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Phoenix sylvestris (sylvestris – Latin, of the forest), silver date palm, sugar date palm அல்லது wild date palm) என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பனைக் குடும்பத் தாவரமாகும். இவை பெரும்பாலும் தெற்கு பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், வங்கதேசம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேலும் மொரிசியசு, சாகோஸ் அரிப்பிளாகோ, புவேர்ட்டோ ரிக்கோ, லீவர்டு தீவுகள் ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. இவை 1300 மீட்ர் உயரம்வரை சமவெளிகளில் வளரக்கூடியவை. இதன் பழங்கள் மூலமாக ஒயின், ஜெல்லி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த மரங்களிள் இருந்து கள், பதநீர் ஆகியவை இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இறக்கப்படுகின்றன. வெல்லமும் தயாரிக்கப்படுகின்றன. இதன் ஓலைகளைக் கொண்டு பை, பாய், துடப்பம் ஆகியவை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் இயல்பாக காணப்படும் இம்மரம் தோற்றத்தில் பேரீச்ச மரத்தை ஒத்தது. இம்மரங்களில் ஆண் மரங்கள், பெண் மரங்கள் என உண்டு பெண் மரங்களில் மட்டும் பழங்கள் உருவாகும், ஆண் மரங்களில் பழங்கள் உண்டாகாது. இந்த மரத்தை இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் வால் இந்தி (wal Indi”, “val Indi”,(වල්ඉංදි ) என அழைக்கின்றனர்.

விளக்கம்

இம்மரங்கள் 4 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன. மரத்தின் விட்டம் 40 செ.மீ வரை இருக்கும். இதன் ஓலை மட்டை மூன்று மீட்டர் வரை நீளம் கொண்டு சற்றே வளைந்தவாறு இருக்கும். இதன் மட்டையிலும் இலைகளின் முனையிலும் முட்கள் கொண்டிருக்கும். இந்த மரங்களில் ஆண்மரங்கள் உண்டு ஆண்மரங்கள் மஞ்சள் கலந்த வெண்மையாக பூக்கள் பூக்கக்கூடியன. இதன் காய்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும் பழுக்க ஆரம்பித்த பிறகு சிவப்பு வண்ணமடைந்து இறுதியில் பழுப்பு நிறத்தை அடையும். இதன் பழங்கள் உண்ணத்தக்கது.

ஈச்சங் கூடை

ஈச்சங் கூடை என்பது ஈச்சங் குச்சிகளைக் கொண்டு பின்னி உருவாக்கப்படும் கூடை ஆகும். ஈச்சங் குச்சிகளை ஒரே அளவில் வெட்டி எடுத்து சுத்தம் செய்து வட்ட வடிவில் பின்னினால் கூடை வடிவம் கிடைக்கும். நமக்கு தேவையான அளவில் பின்னிக்கொள்ளலாம். இக்கூடை பழங்கள் வைத்துக்கொள்ள பொிதும் பயன்படுகிறது. திருமண நிகழ்வுகளில் சோறு வடிப்பதற்கும் பயன்படுகிறது. கிராமப்புறங்களில் எல்லோருடைய வீடுகளிலும் பயன்படுத்தப்படும்.

வெளி இணைப்புகள்

ஈச்ச மரம் – விக்கிப்பீடியா

Phoenix sylvestris – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.