அற்புதப் பழம் மரம் | Synsepalum dulcificum

அற்புதப் பழ மரம் 6 முதல் 14 அடி உயரம் வளரக்கூடியது. இதனுடைய இலைகள் 10 முதல் 15 செ.மீ. நீளம் வரை இருக்கும். இலைப் பக்கத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் வருகின்றன. இதில் சிறிய சிவந்த சதைப்பற்றுள்ள பழங்கள் வருகின்றன. இப்பழத்தில் ஒரு விதை இருக்கும். முதலில் சாப்பிடும் போது புளிப்பான அமிலத்தன்மையுடன் இருக்கும். எலுமிச்சை, சுண்ணாம்பு கலந்தது போல் இருக்கும். பிறகு இனிப்பது போன்று தோன்றும். பிறகு எதைச் சாப்பிட்டாலும் இனிப்பாகவே இருக்கும். ஆப்பிரிக்காவில் இதை மக்காச்சோள ரொட்டியில் சேர்க்கிறார்கள். இதே போல் புளிப்புக்களில் இனிப்பு வருவதற்காக இதைச் சேர்க்கிறார்கள்.

காணப்படும் பகுதிகள்

இம்மரம் மேற்கு ஆப்பிரிக்காவில் வளர்கிறது. இச்சாதியில் 30 வகை உள்ளது.

வெளி இணைப்புகள்

அற்புதப் பழம் மரம் – விக்கிப்பீடியா

Synsepalum dulcificum – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.