இருவேல் (Xylia xylocarpa) என்பது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த மரம் ஆகும். இத்தாவரம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் காணப்படுகிறது. இதன் மரக்கூழைக் கொண்டு பரிசுப்பொருள்களைப் போர்த்திக் கொடுக்கும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகள் உணவாகப் பயன்படுகின்றது. இது ஒரு மருத்துவத் தாவரமாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் இலைகளைக் கொண்டு தாய்லாந்து நாட்டில் யானைகளின் காயங்களை ஆற்ற உதவும் மருந்து தயாரிக்கப்படுகிறது.