குரங்கு பானை
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : லிசிதில் ஒலரியா Lecthis Ollaria
குடும்பம் : லிசிதிடியே (Lecythideae)
இதரப் பெயர்கள்
சொர்க்கலோக கொட்டை Paradise Nut
பிரேசில் கொட்டை Brazil Nut
மரத்தின் அமைவு முறை
இது பெரிய மரம் ஆகும். இதனுடைய மரம் மிகவும் கடினமானது. இதில் வெள்ளை நிறப் பூக்கள் வருகிறது. இதனுடைய பழம் குடவை போன்று உள்ளது. மேல் ஓடு கடினமாகவும், பழுப்பு நிறத்தில் உள்ளது. இதனுடைய மேல்பகுதியில் கடினமான மூடி உள்ளது. பார்ப்பதற்கு பானை போன்ற மிக ஆச்சரியமான வடிவில் உள்ளது. காய் கனிந்தவுடன் மூடி திறந்து கீழே விழுந்து விடுகிறது. உள்ளே உள்ள விதைகள் கீழே கொட்டிவிடுகிறது. இதனால் இதனுடைய விதையை சேகரிப்பது மிகவும் கடினம் ஆகையால் இதன் விதைகள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும்.
திறந்த பானை கவரக்கூடிய வகையில் மிகச் சுவையாக இருக்கும். இதனுடைய சுவைக்காக குரங்கு தலையை வெளியே விட்டப்பிறகு வெளியே எடுக்க முடியாமல் மாட்டிக்கொள்கிறது. இந்தப் பழத்தை வைத்து குரங்கையும், நாயையும் பிடிக்கிறார்கள்.
பொருளாதாரப் பயன்கள்
இம்மரம் பிரேசில் நாட்டில் வளர்கிறது. இதனுடைய பழம் சாக்லேட் தயாரிக்கப் பயன்படுகிறது.