சே மரம்

(தாவர வகைப்பாடு:Swietenia soymida, ) A. Dunc.
Swietenia rubra Wight ex Wall.
Swietenia obtusifolia Stokes
Swietenia febrifuga Roxb.

சே மரத்தை (Soymida febrifuga) செம்மரம் என்றும் ரோட்டுசெம்மை மரம் என்றும் இக்காலத்தில் வழங்குகின்றனர். ரோட்டுசெம்மை அடர்சிவப்பு நிறம் கொண்டது. இது தழை, பூ, காய் உள்ள மரமாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் சே மரம்

சே மரத்தைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சே என் மரப்பெயர் ஒடு மர இயற்றே என்பது தொல்காப்பிய நூற்பா.

என இச்சொல் புணரும் என்பதை உரையாசிரியர் விளக்கம் தருகிறார்.

சொல் விளக்கம்

 • மரம்
 • எருது
 • மருத்துவப் பயன்

  செம்மரம் லுபியோல், சிடோஸ்டேரோல், மீத்தைல் அங்கோலெனேட் (lupeol, sitosterol, methyl angolenate) ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. செம்மரப் பட்டைகளில் டெட்ராநோர்டிட்ரைபினாய்டு என்ற வேதிப் பொருள் உள்ளது (tetranortriterpenoids). இப்பட்டைகளிலிருந்து பிசின் கிடைக்கிறது. நடுமரத்தில் பெஃப்ரிஃபூஜின், நாரிஜெனின், மைரிசெடின், டைஹைட்ரோமைரிசெடின் (febrifugin, naringenin, myricetin, dihydromyricetin) ஆகியவை உள்ளன. மரத்திலும் பட்டையிலும் டிஆக்சிஆண்டிரோபின் (deoxyandirobin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இலைகளில் குயிர்செடின் (quercetin),மற்றும் நைட்டினோசைட் (nitinoside) என்ற பொருட்கள் உள்ளன.

  மரப்பட்டைகள் வயிற்றுப்போக்கு நோய்க்கும் காய்ச்சலுக்கும் மருந்தாகவும் பொது டானிக்காகவும் பயன்படுகிறது. இம்மரத்தின் எரிவடிச்சாறு (decoctin) வாய்ச்சுத்தம் செய்யும் மருந்து தயாரிக்கவும் (gargles), வஜினல் நோய்த்தொற்றுகள், ருமாட்டிக் மூட்டு வீக்கங்கள், வயிறு சுத்தம் செய்யும் எனிமாட்டா போன்ற மருந்துகள் தயாரிக்கவும் பயன்டுகின்றது.

  வெளி இணைப்புகள்

  சே மரம் – விக்கிப்பீடியா

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *