தாவரவியல் பெயர் : லோடோசியா மாலதீவிக்கா Lodoicea maldivica
குடும்பம் : பாமேசீயீ Palmaceae
இதரப் பெயர்கள்
மரத்தின் அமைப்பு முறை
இம்மரம் 60 முதல் 100 அடி உயரம் வளரக்கூடியது. இதன் அடிமரம் 1 அடி விட்டம் கொண்டது. 50 முதல் 80 வயது வரை உயிர் வாழும். இலை 8 முதல் 10 அடி நீளமும், 5 முதல் 6 அடி உயரமும் உடையது. மரத்தில்
ஆண் மரம், பெண் மரம், என தனித்தனி உண்டு.
விதை அமைவு
முப்பது வருடத்திற்கு பிறகே பூ வரும், காய் முற்றுவதற்கு 6 வருடங்கள் ஆகின்றது. இதனுடைய கொட்டையின் உள்பகுதியில் இரண்டு பிரிவுகளாக உள்ளது. சில சமயம் மூன்று அறை உடையதாகவும் உள்ளது. இதனுடைய ஓடு மிகவும் கடினமாகவும், மரப்பொருள் நார்களால் ஆனது.
இதனுடைய விதை 11ஃ2 அடி நீளமும் 27 கிலோ எடையும் கொண்டது. இதுவே உலகின் மிகப் பெரிய விதை ஆகும். இதன் விதை முளைப்பதற்கு மூன்று ஆண்டுகூட தேவைப்படும்.
காணப்படும் பகுதி
இவை மாலத்தீவின் கடல் ஓரங்களில் வளர்கின்றன.