வகைப்பாடு
தாவரவியல் பெயர் : கோரிபா அம்பரக்குளிபெரா Corypha umabraculifera
குடும்பம் : ‘பாமேசீயீ (Palmaceae)
இதரப் பெயர்கள்
‘குடைப்பனை’
மரத்தின் அமைவு
பனைகளில் மிகப்பெரியது. இது 60-80 அடி உயரம் வளரக்கூடியது. அடிப்பகுதி 3-4 அடி விட்டம் உடையது. இதனுடைய இலைகள் மிகப்பெரியதாக விசிறி போன்றும், சூரிய ஒளியை மறைக்க கூடிய குடை போன்றும் உள்ளது. இதன் இலை (ஓலை) 16 அடி விட்டம் உடையது. இலையின் காம்பு 15 அடி நீளத்திற்கு இருக்கும். இம்மரம் 20-40 வருடத்திற்கு பிறகு முதிரச்சியடைந்து பூக்கும் மரத்தின் உச்சியில் நடுப்பகுதியிலிருந்து பூங்கொத்து 15 அடி நீளத்திற்கு வளரும். எட்டு மாதத்திற்கு பிறகு காய்கள் உருவாகும். 12 மாதத்திற்கு பிறகு மரம் இறந்துவிடும்.
சிறப்புகள்
குடைப்பனை பல ஆண்டுகள் பூவாமலே வாழ்ந்திருந்து கடைசியாகப் மிகப்பெரிய பூங்கொத்து ஒன்றை விடுத்து, ஆயிரக்கணக்கான விதைகளை உண்டாக்கிவிட்டு மடிந்து போகும்.
காணப்படும் பகுதிகள்
இது இலங்கையில் வளர்கிறது. இதன் இலைகள் காகிதம் தயாரிக்க பயன்படுகிறது. மேலும் இதனுடைய விதை ஓடு, பட்டன் செய்யப்படுகிறது.