பெருக்க மரம்

பெருக்க மரம் (Baobab, பாவோபாப்) என்பது அடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். பெருக்க மரத்தில் ஒன்பது இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குச் சொந்தமானவை. இரண்டு இனங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும், இன்னொன்று ஆத்திரேலியாவிற்கும் சொந்தமானதாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது.

நீர் சேமிப்பு

பெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது. இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும்.

இலங்கையில் பெருக்க மரம்

பாவோபாப் மரங்கள் அராபிய வணிகர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. இலங்கையில் இம்மரங்கள் இரண்டு உள்ளன. ஒன்று மன்னாரிலும், மற்றையது நெடுந்தீவிலும் உள்ளன.

வெளி இணைப்புகள்

பெருக்க மரம் – விக்கிப்பீடியா

Adansonia – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *