பொந்தன்புளி மரம்

பொந்தன்புளி அல்லது ஆனைப்புளி, பெருக்கமரம் என்றும் தமிழில் அழைக்கப்படுவது (அறிவியல் பெயர்; Adansonia digitata, ஆங்கிலத்தில்; baobab) என்பது ஒரு மரமாகும். இது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெருக்க மரம் ஆகும். குறிப்பாக சூடான உலர்ந்து காணப்படும் சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள சவானாவில் காணப்படுகிறது. இம்மரங்கள் தமிழகம் மற்றும் இலங்கைக்கு குதிரை வணிகர்களாக வந்த அரேபியர்களின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்தன. குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள் பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகளை கொடுப்பார்கள்.

தாவரவியல்

பொந்தன் புளிய மரத்தின் அறிவியல் பெயர் (அரபு மொழியில் வழங்கப்படும் பெயரில் இருந்தும்: بو حباب), ஆப்ரிக்க வறண்ட நிலங்களில், இம்மரத்தை முதன்முதலாக கண்டறிந்த பிராஞ்சு நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் (1727-1806) என்னும் தாவரவியலாளர் பெயரையும் இணைத்து அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்ற தாவரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. இவரால் அதிகாரபூர்வமாக செனிகல் நாட்டில் உள்ள சோர் என்ற தீவில் 1749 ஆம் ஆண்டில் இம்மரம் கண்டுபிடிக்கப்பட்டது. இம்மரத்தின் இலைகள் கீரையாகச் சமைத்து உண்ணக் கூடியதாகவும், கனிகள் சுவையான பானம் தரக்கூடியதாகவும் இருப்பதைக் கண்டார் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு நாளில் இரண்டுமுறை இந்த பானத்தை குடித்துவந்தார். இதனால் இவர் உடல் நலம் மேம்பட்டதாக நம்பினார்.

விளக்கம்

கிளைகள் மற்றும் இலைகள் ஐவிரல் அமைப்புடன் கையை ஒத்ததாக இருக்கும். ஐந்து முதல் இருபத்தைந்து மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய பொந்தன்புளி மரங்களின் அடிப்பாக சுற்றளவு சுமார் 10–14 மீட்டர் கொண்டது. இம்மரத்தில் 15 செமீ அகலத்தில் வெண்மை நிறப் பூக்கள் கிளையின் நுனியில் பூக்கக்கூடியவை. நீண்ட காம்புகளில் காய்கள் உருவாகும். பழுப்பு நிறத்தில் உள்ள பொந்தன்புளி பழங்கள், நீண்ட நாட்கள் மரத்தி லேயே தொங்கிக் கொண்டிருக்கும்.

வெளி இணைப்புகள்

பொந்தன்புளி மரம் – விக்கிப்பீடியா

Adansonia digitata – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *