கோங்கு அல்லது முள்ளிலவு என்பது ஓருவகை மரமாகும். இதன் இலைகள் கைபோல் பிரிந்த இலைகளையும், இலையுதிர் காலத்தில் தோன்றும் மிகவும் செந்நிற மலர்களையும் வெண்ணிற பஞ்சிற் பொதிந்த வழவழப்பான உருண்ட விதைகளையும் உடைய நெடிதோங்கி வளரும் மரம். மரமெங்கும் கூம்பு வடிவ முட்கள் வளர்ந்திருக்கும். தமிழகத்துக் காடுகளிலும் ஆற்றோரங்களிலும் தானே வளர்பவை. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின், பஞ்சு, வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருமங்கலக்குடி, திருக்கோடி, திருக்கைச்சினம் முதலிய தலங்களில் கோங்கு தலமரமாக உள்ளது.
About the author
Related Posts
October 4, 2021
சீர் பெசன்ட்
September 29, 2021
பால்கன் கழுதை
September 20, 2021