பாட்டில் மரம்
வகைப்பாடு
தாவரவியல் பெயர் : பிராக்சிகிட்ரான் ரூபாஸ்ட்ரிஸ் Brachychitron rupestris
இதரப் பெயர்
ஆஸ்திரேலியாவின் பாட்டில் மரம்
மரத்தின் அமைப்பு
இம்மரம் 60 அடி உயரம் வளரக் கூடியது. இதன் அடிமரம் மிகவும் விசித்திரமாக பாட்டில் வடிவத்தில் உள்ளது. அடிப்பகுதி 12 அடி விட்டம் கொண்டுள்ளது. மரத்தின் அடிப்பகுதி மேல் நோக்கி செல்லகச் செல்ல குறுகி கழுத்து உள்ளது. இதிலிருந்து பல கிளைகள் விரிந்து பறந்து செல்கிறது. கை வடிவ கூட்டிலைகள் உள்ளன.
சிறப்பு பண்பு
இம்மரத்தின் கட்டை பகுதி மிருதுவான பஞ்சு போன்ற சோற்றணு திசுக்களால் ஆனது. இவற்றில் நீர் சேமித்து வைக்கப்படுகின்றன. கோடை காலங்களில் இம்மரத்தின் பாகங்களுக்கு தேவையான நீர் இவற்றிலிருந்து கிடைக்கிறது.
காணப்படும் பகுதி
இம்மரம் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இவற்றில் 11 இன மரங்கள் உள்ளன.